பொதுவாகவே திரையுலகில் பொருத்தவரை சர்ச்சைகள் மற்றும் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் இப்படியொரு நிலையில் முன்பை காட்டிலும் தற்போது இது அதிகரித்து விட்ட நிலையில் பலரும் இதன் மூலமாக அதிகளவில் பாதிக்கபட்டு வருகின்றனர் . அதிலும் கடந்த சில மாதங்களாக தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் அது எந்த அளவிற்கு நல்ல விசயங்களுக்கு பயன்படுகிறதோ அதைக்காட்டிலும் அதிகமாக தீய செயல்களுக்கு தான் பயன்பட்டு வருகிறது எனலாம்
. இந்நிலையில் சமீபத்தில் ஏ ஐ எனும் இணைய செயலியின் மூலமாக பலவிதமான செயல்பாடுகள் எளிதில் செய்து வரும் நிலையில் இதைவைத்து பலரும் பலவிதமான புது மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் சில விஷமிகள் மட்டும் கெட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் இது குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் மகளும் இளம் நடிகையுமான ஜான்வி கபூர், சமீப காலமாக ஏ ஐ தொழில் நுட்பம் என்பது சாதாரண
ஒன்றாக மாறிவிட்டது. இதன் விளைவாக நான் பெரிதளவில் பாதிக்கபட்டு இருக்கிறேன் காரணம் எனது நான் பள்ளிபருவத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் போது யாஹூ வலைத்தளத்தில் எனது அப்பா அம்மாவுடன் வெளியில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து அதை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் . அதோடு அணைத்து ஆபாச தளத்திலும் எனது முகத்தை மார்பிங் செய்து மிகவும் கேவலமாக சித்தரித்து வருகின்றனர் இதன் காரணமாக எனது
திரையுலக வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன் . இந்நிலையில் இதன் காரணமாக அவர்கள் மீது போலீசில் புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளேன் என மிகுந்த கோபத்துடன் பேசியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………….