பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பலரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக்பாசின் முதல் சீசனை யாராலும் மறக்க முடியாது அந்த வகையில் இந்த சீசனில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வேற லெவலில் கலக்கி இருந்தார்கள் எனலாம் . இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டிலையும் தட்டி சென்றவர் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் . இதையடுத்து பிக்பாசில் வெளியேறிய பிறகு பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் மார்க்கெட் ராஜா எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த கலகதலைவன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரவிற்கு இளம் நடிகையான ரஹெய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவரும் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் ஹீரோயினாக நடித்து
வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஆரவ் மற்றும் ரஹெய் ஜோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழகிய குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனக்கு அழகிய பெண் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நிலையில் அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………….
View this post on Instagram