கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தரின் கைது குறித்ததாக தான் இருக்கும் . இந்நிலையில் ரவீந்தர் கடந்த வருடம் தான் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது பலரது மத்தியிலும் விமர்சனங்களை பெற்று வந்தது . இருப்பினும் இதற்கு எல்லாம்
பதிலடி கொடுக்கும் விதமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி பண மோசடி செய்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை கொடுத்தது. இதற்கிடையில் அவரை ஜாமீனில் எடுக்க மகாலட்சுமி பல வழிகளில் முயற்சி
செய்து பலனளிக்காத நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கூட உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அடுத்ததாக ஜாமீன் உயர்நீதி மன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் கொடுத்துள்ளது நீதிமன்றம் அந்த வகையில்
இன்னும் இரண்டு வாரத்தில் சுமார் ஐந்து கோடிக்கும் மதிப்புள்ள உத்திரவாதத்தை கொடுக்கும் படியாக கூறியதை அடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………