மக்கள் மத்தியில் பொதுவாக வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாகிறதோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் அதிகளவில் பிரபலத்தை பெற்று வரும் நிலையில் முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக
இருந்து வரும் நிலையில் ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கும் விதமாக நேற்றைய நாளில் உலகநாயகன் கமல் அவர்களின் தலைமையில் பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கியது . இதையடுத்து இந்த சீசனில் எந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என பலரும் ஆவலுடன் எதிபார்த்த நிலையில் தற்சமயம் பதினெட்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக களமிறங்கி
உள்ளார்கள் . அந்த வகையில் இந்த முறை புது மாறுதலாக இரண்டு வீடு அறிமுகபடுத்திய நிலையில் போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்க வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த முறை பிக்பாசில் பிரபல சர்ச்சை நடிகர் கூல் சுரேஷ், எழுத்தாளார் பாவா செல்லத்துரை, விசித்ரா, விஷ்ணு , வினுஷா தேவி , சரவணா விக்ரம், வனிதாவின் மூத்த
மகளான ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், ஐஷு, நடிகர் கவினின் நண்பரான பிரதீப் ஆண்டனி , ரவீனா தாகா , விக்ரம் பட புகழ் மாயா கிருஷ்ணன், யுகேந்திரன், மனிசந்திரா, விஜய் வர்மா, அனன்யா ராவ் , பூர்ணிமா ரவி , நிக்சன் என பதினெட்டு பிரபலங்கள் இந்த முறை கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் இந்த சீசன் எந்த அளவிற்கு சூடு பிடிக்க போகிறது என பொறுந்திருந்து பார்ப்போம் ……………………