பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இதில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் மொத்தம் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் இந்த சீசன் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியளர்கள் இடையே சண்டைகளும் விவாதங்களும் ஆரம்பமான நிலையில் முதல் வாரத்திலேயே எளிமிநேசனில் அனன்யா குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய
நிலையில் புது திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த வாரம் முழுக்க காரசாரமாக இருந்த நிலையில் அதில் பெரிதளவில் விவாதத்தில் இருந்து வந்தது முன்னாள் பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகளான ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே நடந்த சச்சரவுகள் தான். இப்படி ஒரு நிலையில் இது குறித்து வனிதா தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் , பிக்பாஸ் வீட்ல
இருக்கிற பொண்ணுங்க டாட்டூ போடுது தம் அடிக்குது இது எல்லாம் அவங்க பெத்தவங்க பாத்துப்பாங்க, ஆனா அங்க இருக்கிற பிள்ளைங்களா எல்லாம் உங்க பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்ட வேண்டாம். பிக்பாஷிற்கு வந்த பிள்ளைங்களா எல்லாம் உங்களுக்கு என்ன நேந்தா விட்ருகாங்க . நீங்க வேணா மூணு பசங்களோட அம்மாவா இருக்கலாம் அதுக்காக மத்த பிள்ளைங்களா
கரெக்சன் பண்ண வேண்டாம் முதல்ல உங்க பிள்ளைங்களா பாருங்க பிக்பாசுக்கு 100நாள் எதுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டு பாருங்க தேவை இல்லாத விசயத்துல மூக்கை நுழைக்காதீங்க என வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் தரப்பினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………….