தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இந்நிலையில் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பளார், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் மீது மிகப்பெரிய அளவில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் பிரபல முன்னணி இசையமைப்பளார் ஆன டி இமான் அவர்கள். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில் பல படங்களில் இருவரும் ஒன்றாக
இணைந்து வேலை செய்துள்ளார்கள். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருவதை அடுத்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டி இமான் , சிவா எனக்கு துரோகம் பண்ணிட்டாரு எனக்கும் எனது முதல் மனைவி மோனிகாவுக்கும் விவாகரத்து நடக்க காரணமே இவர் தான் இதற்குமேல் என்னால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து இது குறித்து பேசியுள்ள அவரது முதல் மனைவி மோனிகா, எங்களுடைய குடும்ப நல்ல நண்பர் சிவகார்த்திகேயன் அவர் மிகவும் நாகரீகமான மனிதர் , எப்போதுமே இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார் இந்நிலையில் எனக்கும் இமானுக்கும் அடிக்கடி சண்டைகள் வந்த நிலையில்
சிவா இதை கண்டுகொள்ளவில்லை இதைதான் இமான் வேறு மாதிரியாக கூறி வருகிறார் . இது வெளியில் வேறு கண்ணோட்டத்துடன் வெளியாகி எனக்கு மனதளவில் பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..