இன்றைய சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பில் பலரையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ்,
தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யா காதலித்து திருமணம் கொண்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே
விவாகரத்தில் போய் முடிந்தது . இதையடுத்து தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் சமந்தா மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதொடும் பல படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டு இருந்தனர். அதில் ரசிகர் ஒருவர் , நீங்கள் கர்ப்பமாக இருந்து
இருக்கிறீர்களா என கேட்டுள்ளார் . இதற்கு பதில் கொடுத்த சமந்தா ஆமாம் இருந்து இருக்கிறேன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்ப்பமாக தான் இருக்கிறேன் ஆனால் குழந்தை தான் இன்னும் பிறக்கவில்லை என நக்கலாக கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் ,மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……………………