திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல அசம்பாவிதம் அரங்கேறி வருகிறது இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதோடு பலரும் இதன் காரணமாக காலமாகியும் வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி திரையுலக பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உறைய செய்துள்ளது. அந்த
வகையில் அந்த காலத்தில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து அதன் மூலம் வெற்றி கண்டது மட்டுமின்றி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி தயாரிப்பாளர் வி ஏ துரை . இதையடுத்து கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கஜேந்திரா, சூர்யா மற்றும் விக்ரம் மாறுபட்ட நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் , லவ்லி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார் . இவ்வாறு
பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக சரக்கரை நோயால் பெருமளவில் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் இவரது சிகிச்சைக்கு பண உதவி செய்திருந்தனர் . இதையடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்து
ஒரு ஒரு கால் அகற்றப்பட்டதை அடுத்து சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் இவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் . இந்நிலையில் இன்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் தெரிய வந்ததை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…………….