கடந்த சில மாதங்களாக திரையுலகில் பெரிதளவில் பேசப்பட்டு வந்த திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி தற்போது உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் லியோ படம் பற்றியதாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யு என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே
பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல லாபத்தை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்னர் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கூட நடக்காமல் போனது. இருப்பினும் லியோ படம் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்த நிலையில் படம் நேற்று வெளியாகி வேற லெவலில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து இந்த படத்தில்
முக்கிய பங்காக இருந்தது லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்றால் அதையடுத்து பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசை இன்னொரு பக்கம் எனலாம். அந்த வகையில் லியோ படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என தனது வெறித்தனமான இசையால் பலரையும் துள்ளி குதிக்க செய்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கியுள்ள
சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . காரணம் லியோ படத்தில் இசையமைக்க அனிருத் சுமார் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை பலரும் வாயடைத்து போயுள்ளனர்……………….