தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபது விஜய் அவர்கள் இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் பல சாதனைகளை படைத்து வருகிறது . இதையடுத்து இந்த
படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அடுத்த படமாக தனது தளபதி 68 படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் நடிக்க உள்ளார் . இந்நிலையில் இந்த படத்திற்கான படபூஜைகள் எல்லாம் முடிந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடல்காட்சி ஒன்றை படமாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. இவ்வாறு இருக்கையில் அதில் பிரபு தேவா , ரியாஸ் கான், பிரசாந்த், விஜய்
ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த பாடலை பிரபுதேவாவின் சகோதரான ராஜூ சுந்தரம் அவர்கள் இயக்கியிருந்தார் . இது ஒரு பக்கம் இருக்க முதலில் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க அரவிந்த சாமியை முடிவு செய்திருந்த நிலையில் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காத நிலையில் அவருக்கு பதிலாக வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளார் . இந்நிலையில் பல
வருடங்கள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதோடு மோகன் வில்லனாக நடிக்கும் நிலையில் இவர் இந்த படத்தில் நடிக்க சுமார் இரண்டு கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இதுவரை மைக் மோகன் நடித்த படங்களிலேயே அதிகமாக சம்பளம் வாங்கியது இந்த படத்தில் தான் என கூறப்பட்டு வருவதை அடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது……………..