என்னதான் தற்போது திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வந்தாலும் அந்த காலத்தில் வெளிவந்த பல வெற்றிபடங்களும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் பிரபலமாக இருந்து வருகிறது எனலாம். அந்த வகையில் அந்த காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பல சந்தோஷமான குடும்ப கதைகளை இயக்கி அதில் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை அடைந்த பல படங்களை இயக்கிவர் பிரபல முன்னணி இயக்குனர் விக்ரமன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த
அளவிற்கு பிரபலமான இவர் புதிய பாதை படத்தை இயக்கி நடித்த பார்த்தியன் அவர்களுடன் உதவி இயக்குனராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிலையில் முதலில் புது வசந்தம் படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பூவே உனக்காக, வானத்தை போல, சூர்ய வம்சம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் இவர் இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ எனும் படத்தை இயக்கியிருந்தார். இதன் பின்னர் எந்த படங்களையும் இயக்காமல் இருக்கும் நிலையில் இது குறித்து விசாரிக்கையில் விக்ரமன்
அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவரது மனைவி குச்சிபுடி நடன கலைஞராக இருக்கும் நிலையில் இதுவரை 4000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து இவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில் அந்த சிகிச்சை தவறாக போனதை அடுத்து அவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருந்து
வருகிறார் மேலும் சில மாதங்களாக அவரது கிட்னியும் பதிக்கப்பட்ட நிலையில் அதற்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் அவரை பார்த்து கொள்வதையே முழு நேர வேலையாக இருக்கும் நிலையில் தான் விக்ரமன் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….