பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கபடும் நிலையில் அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள்
போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இந்த முறை ஐந்து பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த வார எவிக்சனில் எந்த போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து மக்கள்
பலரும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இவர் தான் வெளியேற போகிறார் என பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்த எவிக்சனில் பலரும் தேர்வாகி இருந்த நிலையில் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று வரும் போட்டியாளர் என பார்த்தால் அது பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக பிரபலமாகி பிக்பாசில் கலந்து கொண்ட சீரியல் நடிகை வினுஷா தான்
அது. ஆம் இவர் பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதலே இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வரும் நிலையில் ஒருமுறை பிக்பாஸ் கூட இவர் கன்டென்ட் ஏதும் தருவதில்லை என சிறை அறைக்கு அனுப்பி இருந்தார் . இந்நிலையில் இவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………….