இன்றைய சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல பிரமாண்டமான படங்கள் வெளியாகி வருவதோடு அதற்கு ஏற்ப கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த படங்களில் பல நடிகர் நடிகைகளும் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும்
பல நடிகர்களும் இன்றைக்கு பல ரசிகர்களின் மனதில் பிரபலமாக தான் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவும் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம், காமெடி என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி குணசித்திர நடிகர் நாசர்.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு நடிகர் சங்க முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார் . இந்நிலையில் நாசர் அவர்களின் குடும்பத்தில் சோகமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது இதையடுத்து நாசர் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் இன்றியமையாத காரணியாக இருந்த அவரது தந்தை செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் வாழ்ந்து வந்த மெஹபூப் பாஷா இன்று உடல்நல குறைவு காரணமாக காலமாகி உள்ளார்.
நாசர் அவர்கள் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து முடித்து விட்டு வாய்ப்பு இல்லாமல் தாஜ் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் மீண்டும் அவரை திரைத்துறைக்கு வலுகட்டாயமாக அனுப்பி வைத்தது அவரது தந்தை தான் . இந்நிலையில் அவரது மறைவு குடும்பத்தினரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்……………………