தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை காட்டிலும் சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தையும் கவனத்தையும் செலுத்தி வருகின்றனர் . இதன் காரணமாக மாடர்ன் உடையில் அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொள்கின்றனர் . மேலும் சொல்லப்போனால் சோசியல் மீடியாவில் போட்டோவை பதிவிட்டு அதன்
மூலமாக பிரபலமாகி இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருபவர்கள் ஏராளம் எனலாம். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதையடுத்து அந்த புகைபடத்தில் பிரபலம் யாரென பலரும் யூகித்து வரும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரியின் மகனும் பிரபல நடிகருமான ஜீவா தான் அது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தித்திக்குதே படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நிலையில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் காபி வித் காதல் திரைப்படம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில்
கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து ஜீவா தற்போது மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் இணைந்து யாத்ரா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது……………..