தற்போது பெரும்பாலும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் தான் . அதிலும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலபடுத்தி கொண்டு வரும் நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளின் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம்
சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் . இவர்ர் இந்த நிகக்ழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அவரது மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார் . இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் அவரவர் பங்குக்கு கன்டென்ட்களை
அள்ளி கொடுத்து வரும் நிலையில் கடந்த வாரம் ஜோவிகாவும் தன் வேலையை தொடங்கிய நிலையில் விசித்ராவிடம் கடும் மோதலில் ஈடுபட்டு இருந்தார் . அம்மாவுக்கு பொண்ணு தப்பாம பொறந்துருக்கு என்பது போல இந்த சீசன் வனிதாவாக வலம் வருகிறார் . இதற்கிடையில் தனது மகளுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக விசித்ராவை சும்மா வெளுத்து வாங்கி இருந்தார் வனிதா இதையடுத்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில்
வனிதா புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது இளையமகளுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் அதுவும் தாய்லாந்தின் தலைநகரான பாங்காங் சென்றுள்ள நிலையில் அங்கு மகளுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் மகள் பிக்பாசில் இருக்கும் போது இது தேவையா என்பது போல கலாயித்து தள்ளி வருகின்றனர்………………