தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் மக்கள் படங்களை பார்த்து வருவதோடு அந்த படங்களின் நடிகர்களையும் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் பல வருடங்களாக ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக
வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் . இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் பதான் மற்றும் ஜவான் என இரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பலத்த சாதனையை படைத்து வருகிறது . அந்த
வகையில் பதான் படம் மட்டுமே சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் அடுத்த படமாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ஜவான் பல மாநிலங்களில் வெளியாகிய நிலையில் தற்போதைய வசூல் மட்டும் சுமார் ஏறக்குறைய ஆயிரத்து நூறு கோடிக்கு மேலாக வசூல் செய்து வருகிறது . இப்படி இருக்கையில் கடந்த
சில தினங்களாக நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து பல மர்ம நபர்களால் கொலை மிரட்டல் வருவதாக ஷாருக்கான் போலீசில் புகார் கொடுத்த நிலையில் இதை விசாரித்த மகராஷ்டிர மாநில அரசு அவருக்கு ஒய் + பாதுகாப்பு கொடுத்துள்ளனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது…………………..