சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏழாவது சீசன் வெகு பிரமாண்டமான முறையில் தொடங்கியது . இதையடுத்து வழக்கம் போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல் அவர்களே தொகுத்து வழங்கும் நிலையில் இந்த சீசனில் மக்களுக்கு அறிமுகமில்லாத
பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீடு புது மாறுதல்களாக இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரிக்க வைக்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் சில விதிமுறைகள் எப்போதும் கடைபிடிக்கபட்டு வருகிறது இப்படியான நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ரவீனா மற்றும் மணி இருவரும் சீசன்
தொடங்கிய முதல் வாரத்திலேயே இருவரும் பிக்பாஸ் விதிமுறையை மீறி உள்ளார்கள். அந்த வகையில் மணி ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என கூறி கையில் எழுதி காட்டுகிறார் அதேபோல் ரவீனாவும் மைக் ஆப் செய்து விட்டு பேசியுள்ளார் . இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இது போன்ற செயல்கள் இருக்ககூடாது என கமல் மற்றும் பிக்பாஸ் இருவரும் முந்தைய சீசன்களில்
பல முறை எச்சரித்த நிலையில் இந்த சீசனில் முதலிலேயே இவர்கள் செய்த இந்த செயலால் கமல் அவர்கள் இந்த வார இறுதியில் நிச்சயம் இவர்களை கண்டிப்பார் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..
Mani breaks the Bigg Boss rule by having a secret conversation with Raveena by writing on her palm. A matter for the host to question on the weekend.#BiggBossTamil7 pic.twitter.com/XWGMRASur4
— Bigg Boss Follower (@BBFollower7) October 2, 2023