தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றைக்கும் பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருவதோடு தனது இளமையான தோற்றம்
மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு நேசனல் கிரஷாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ராஷ்மிகா கைசவம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில
தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று வெளியான நிலையில் அதில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் மிக நெருக்கமாக இருப்பதோடு அதிகளவில் லிப்லாக் முத்தகாட்சிகள் இடம்பிடித்து இருந்தது. இதனைதொடர்ந்து இதுவரை நடித்த படங்களில் ராஷ்மிகா சுமார் மூன்று கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த நிலையில் இந்த
படத்தில் நடிப்பதற்கு சுமார் ஏறக்குறைய சுமார் நான்கு கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ரன்பீர் கபூருக்கு சுமார் எழுபது கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது……………….