தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாபெரும் பிரமாண்டமான திரைப்படம் லியோ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, அர்ஜுன், சஞ்சய் தத் , சாண்டி, கவுதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக அமோக
வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் வேற லெவலில் செம வைரளாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் குறித்த பல அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உறைய செய்து வரும் நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்ககூடும் எனும் நோக்கில்
இந்த படத்தில் யார் கேமியோவாக வார போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது. இதையடுத்து பலரும் தங்களது கற்பனை குதிரையை ஓட விட்ட நிலையில் முதலில் இந்த படத்தில் விக்ரம் வரபோவதாக கூறினார்கள் அதையடுத்து சூர்யா, பிரபாஸ், தனுஷ், கமல் , கார்த்தி என பலரையும் கூறி வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தெலுங்கி
சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன் அல்லது ராம் சரண் வார இருப்பதாக கூறி வருகின்றனர். எது எப்படியோ இன்னும் சில தினங்களில் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது……………………..