Tuesday, April 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ......? வெளியான தகவல்கள் ......

லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ……? வெளியான தகவல்கள் ……

திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களுள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ப தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னனி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில்

வெளியானதை அடுத்து உலகளவில் பல சாதனைகளை படைத்து வருகிறது . இதையடுத்து லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகளவில் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் அவர்கள் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில்

வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்கையில் லோகேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மாநகரம் படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமான நிலையில் முதல் படத்தில் சம்பளமாக வெறும் ஐந்து லட்சம் மட்டுமே வாங்கியுள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர் ,

விக்ரம் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனைதொடர்ந்து லியோ படத்தை இயக்க சுமார்  30 முதல் 35 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார்…………………

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments