பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யு, அர்ஜுன், சாண்டி என பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இதில் ஹீரோயினாக
நடித்துள்ளவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா . ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் இதுவரை தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் இவர்கள் இருவரது கூட்டணியும் மக்கள் மத்தியில் வேற லெவலில் வெற்றியை பெற்று உள்ளது. இந்நிலையில் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக
மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறபடுகிறது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட தளபதி விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் நடித்த பல ரொமாண்டிக் காட்சிகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் சினிமா உலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க
லியோ படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது. இதனையடுத்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்ட லியோ படத்தில் நடிக்க த்ரிஷா சுமார் 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….