மக்களை பொருத்தவரை திரையுலகில் சினிமாவில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் பிரபலத்தை பெற்று வருகின்றனர் . அதிலும் தொடர்களுக்கு என்று இல்லத்தரசிகள் மத்தியில் தனி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பல முன்னணி
தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஹரிப்ரியா . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சையான பதிவுகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே ஹரிப்ரியா தன்னுடன் பல தொடர்களில் ஒன்றாக நடித்த சக நடிகரான விக்னேஷ்
குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் இவர் வயதான ஒருவரை திருமணம் செய்து கொள்ள
இருப்பதாக பல தகவல்கள் வெளியான நிலையில் இதனை அறிந்த ஹரிப்ரியா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” யாருடா நீங்க எல்லாம் ….? உங்களுக்கு வேற பொழப்பு இல்லையே ” என மிகுந்த கோபத்துடன் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது………………