கடந்த சில மாதங்களாகவே பலரது கவனத்தையும் ஆர்வத்தையும் அதிகளவில் ஏற்படுத்திய திரைப்படம் என்றால் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்ததாக தான் இருக்கும் . அந்த வகையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத் , அர்ஜுன், மேத்யு, சாண்டி , கவுதம் மேனன், த்ரிஷா, மிஸ்கின் என பல முன்னணி திரை
பிரபலங்கள் நடித்துள்ளதை அடுத்து இந்த படம் லோகேஷ் இதற்கு முன்னரே இயக்கிய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்பது போலன பல கேள்விகள் உள்ள நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக லியோ படத்தின் முதற்கட்ட ட்ரைலர் நேற்றைய நாளில் மாலை ஆறு மணிக்கு மேல்
வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே பல சாதனைகளை கடந்து வருகிறது . இதற்கிடையில் இந்த ட்ரைலரில் பல திருப்பங்களும் புதைந்து இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் ஒரு வேளை படத்தில் இரண்டு விஜய் இருக்ககூடும் எனவும் படம் வேறு காலகட்டங்களில் நடக்கலாம் என்பது போலவும்
பல கருத்துகளை பலரும் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதோடு பலரும் அக்டோபர் 19-ம் தேதிக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் ………………………