பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை ஹீரோக்களுக்கு என்றே தனி பிரபலம் இருக்கும் எனலாம் அந்த வகையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்கள். இதையடுத்து இவரது நடிப்பில் எப்போது திரைப்படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிப்பில் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அமோக வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித் அவர்கள் அடுத்ததாக பிரபல முன்னணி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து
வருகிறார். இதனைதொடர்ந்து இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஆசார்பைசனில் நடந்து வரும் நிலையில் அங்கு எடுக்கப்படும் படபிடிப்பின் சில காட்சிகள் வெளியாகி வரும் நிலையில் அதில் தல அஜித் அவர்களின் சமீபத்திய புகைப்படம்
இணையத்தில் வெளியானதை அடுத்து அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் உடல் எடை குறைந்து மெலிந்து போயிட்டாரே என வருத்தமாக கமென்ட் கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………