ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் போலீசாரால் கைது ……… குடிபோதையில் செய்த அநாகரீகமான செயல் ….. வெளியான வீடியோ ……

153

திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி உலகளவில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர் இந்த படத்தை நெல்சன் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் விநாயகன். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் பல படங்களில்

நடித்துள்ள நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பல படங்களில் நடித்திருக்கும் நிலையிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ  ஜெயிலர் படம் தான் எனலாம். இவ்வாறு இருக்கையில் படங்களில் நடிப்பதை தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பேசிய போது, எனக்கு பல பெண்களுடன்

தொடர்பு இருக்கிறது அதோடு எனக்கு ஒரு பெண் பிடித்து விட்டால் நேராக அவரிடம் கேட்டு விடுவேன் என சர்ச்சையாக பேசியிருப்பார். இந்நிலையில் தற்போது விநாயகனை கேரளா போலீசார் கைது செய்து உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைதொடர்ந்து இது குறித்து விசாரிக்கையில் விநாயகன் மிகுந்த குடிபோதையில் எர்னாகுளம்

வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து செம ரகளை செய்துள்ளார். இவ்வாறு இருக்கையில் அவரை கைது செய்த போலீசார் ஜெயிலில் அடைத்து உள்ள நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here