தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் திரையுலகில் எதாவது ஒரு வகையில் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களாக தான் உள்ளார்கள் எனலாம். இந்நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது வெகுளியான நடிப்பு மற்றும் பேச்சால் பலரது மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை கல்யாணி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம்
அந்த அளவிற்கு பல படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், தொடர்களில் நடித்துள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு நவ்யா எனும் மகளும் உள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக ஜூனியர் சூப்பர் ஸ்டார் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கல்யாணி தான்
சிறுவயதில் அனுபவித்த பாலியல் ரீதியான பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் அதில், எனக்கு 8 வயது இருக்கும்போது மியூசிக் டைரக்டர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். நான் தூங்கும் போது என்னிடம் அவர் பல தவறான செயல்களை செய்துள்ளார் இருப்பினும் அவர் எனது அம்மாவின் நெருங்கிய நண்பர் என்பதால் நான் எதையும் வெளியில் சொன்னதில்லை. அந்த வயதில்
எப்படி சொல்வது அப்படியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் . ஆனால் அந்த நபர் எனது அம்மா முன்னாடி என் மீது பாசமாக நடந்து கொள்வது போல் நடிப்பார் எனது அம்மாவும் அவரை தம்பி போல பார்த்து கொண்டார் இதை நான் எனது அம்மா காலமாகும் வரை சொல்லவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….