பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி சில வருடங்களே ஆன நிலையிலும் தனது மாறுபட்ட கதையம்சம் கொண்ட வெற்றிகரமான படங்களால் உலகளவில் வெகு பிரபலமாகி இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம்
வெளியாகி மக்கள் மத்தியில் அமொக வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் அவர்களின் வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் தலைவர் 171 படம் குறித்து கேட்டபோது,
எனக்கு சூப்பர் ஸ்டார் வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அதோடு அவரது வில்லத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதையடுத்து இந்த படத்தில் அந்த வில்லத்தனத்தை எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவு மிரட்டலாக காட்டபோகிறேன் என கூறியுள்ளார் . இவ்வாறு இருக்கையில் இந்த படம் ரஜினி அவர்களின் திரையுலக முற்றிலும் மாறுபட்ட
படமாக இருக்கும் என நம்பலாம் எனும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் படத்தின் கதை இது தான் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வவீடியோ இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது……………..