கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்கள் காலமாகி வரும் நிகழ்வு அரங்கேறி வரும் நிலையில் இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பெருமளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது . அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி சீரியல் நடிகை ஒருவர் நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில் மர்மமான முறையில் காலமாகி உள்ளார் . மலையாள திரையுலகில் பல
முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ப்ரியா . மேலும் மருத்துவராக இருந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணமான நிலையில் இவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தார் இதனைதொடர்ந்து அவ்வளவாக தொடர்களில் ஏதும் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு
அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை கொடுக்கப்பட்டது . இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் இருந்தும் அவரது குழந்தையை மருத்துவர்கள் காப்பற்றிய நிலையில் குழந்தை தற்போது ஐசியுவார்ட்டில் உள்ளது . அதோடு ப்ரியாவிற்கு உடல் அளவில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் இவரது இந்த நிலைக்கு காரணம் என்ன
என தெரியாத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நிலையில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமான தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரையும் உறைய செய்துள்ளதோடு பல முன்னணி சினிமா பிரபலங்களும் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்………………