தற்போது சினிமாவில் ஹீரோயினாக பல புதுமுக இளம் நடிகைகளும் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சின்னத்திரையில் தனது திரையுலக பயணத்தை தொடங்கி இன்றைக்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை வாணி போஜன் . இதையடுத்து அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அடையாளபடுத்தி கொண்ட நிலையில் முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம்
மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஸில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வரும் நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வாணி போஜன், கதைக்கு தேவையில்லாமல்
படுக்கையறை காட்சிகள் வைக்கபடுகிறதா என கேட்ட கேள்விக்கு, செங்கலம் படம் குறித்த கதையை சொல்லும் போது இதில் படுக்கையறை காட்சி இருப்பதை கூறாமல் சூட்டிங் ஸ்பாட்டில் தான் இது போன்ற காட்சி இருப்பதாக கூறினார்கள். அந்த தருணம் நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களிடம் கதைக்கு இந்த காட்சி முக்கியமா என கேட்டேன் அதோடு எதற்காக மசாலாவுக்காக இதை வைக்க வேண்டும் என அவர்களும் ஒகே என அந்த காட்சியை நீக்கி விட்டார்கள் .
என்னை பொறுத்தவரை படத்திற்கும் கதைக்கும் தேவை என்றால் தான் அது போன்ற காட்சிகள் இடம் பெற வேண்டும், தேவை இல்லாமல் இடம்பெறுவது அனாவசியம். நடிப்பில் எப்போதும் கேரக்டர் முக்கியம் என நான் கருதுகிறேன் அதோடு கதைக்கு ஏற்றபடி கேரக்டர் இருக்க வேண்டும் . எனக்கு பணம் முக்கியம் இல்லை கேரக்டர் தான் மிக முக்கியம் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி செம அவரது ரசிகர்கள் மத்தியில் செம சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………..