தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அமலா பால் . இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்ற நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல
மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து தனிமையில் வாழ்ந்து வந்த அமலா பால் தொடர்ந்து பல படங்கள் மற்றும் வெப் சீரியஷில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆண்
ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரை தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய அமலாபால் அதில் தனது காதலருடன் ஒன்றாக நடனமாடி இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோவை தனது இணைய பக்கத்தில்
பதிவிட்டு இருந்தார் . இதையடுத்து அம்மிணி அவரை தான் திருமணம் செய்து கொள்ள போவது உறுதியானதை அடுத்து சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் படியாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………