கடந்த சில வருடங்களாக பெரிதளவில் சர்ச்சையாக பேசபட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று பட தயாரிப்பு நிறுவனரான லிப்ரா ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோரின் திருமணம் தான் . இதையடுத்து இவர்களது திருமண வாழ்க்கை பலரது மத்தியில் விமர்சிக்க பட்ட நிலையில் அதை எதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர்
மோசடி புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மகாலட்சுமி பல தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் , அதில் பேசிய அவர் எனக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் இருப்பது உண்மை தான் ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் நாங்கள் விவாகரத்து
பெற்று பிரிந்து விட்டோம். அதன் பின்னர் எனது முன்னாள் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இருந்தும் நான் ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் எனது மகன் சச்சினுக்காக தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு
செய்த நிலையில் அப்போது தான் ரவீந்தர் மாதிரி நல்ல கணவர் எனக்கு கிடைத்தார் என உருக்கமாக பேசியிருந்தார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது …………………