வினுஷா உடல் குறித்து கொச்சையாக பேசிய நிக்சன் ………அதிரடி காட்டிய பிக்பாஸ் ……. வெளியான ப்ரோமோ வீடியோ …….

114

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு மேலாக கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் எல்லைமீறிய நிலையில் டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ்  போட்டியாளர்கள்

மத்தியில் சண்டையை கிளப்பி விட்டிருந்தார். அதோடு வாரத்தின் இறுதியில் கமல் அவர்கள் வந்ததை அடுத்து பிரதீப் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியிருந்தார். மேலும் அந்த வாரம் எவிக்சனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அன்னபாரதி குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் தன் பங்குக்கு நீங்க என்னடா கன்டென்ட் கொடுக்குறீங்க இதோ பாருங்க நான் தரேன் கன்டென்ட் தரேன் என சம்பவத்தை ஸ்டார்ட் செய்துள்ளார். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் பற்றி புறம் பேசியதை அப்படியே டிவியில் போட்டு காட்டி அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பேச கூறியுள்ளார். இந்நிலையில்

பிக்பாசில் இருந்து வெளியேறிய வினுஷா குறித்து நிக்சன் உடல் குறித்து அசிங்காக பேசியதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் ஜோவிகா தினேஷ் குறித்து பேசிய வார்த்தை , ஐஷு மாயா குறித்து பேசிய வார்த்தை என அனைவருக்கும் செம ட்விஸ்ட் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here