இன்றைக்கு தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் பல படங்களை இயக்கி மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி இருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே சிறப்பான கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பல முன்னணி இயக்குனர்கள் பிடித்துள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் பாமர மக்களுக்கும் எளிதில் சினிமாவையும் கதையும் கொண்டு சேர்க்கும் விதத்தில் தொடர்ந்து பல மாறுபட்ட குடும்பங்களின் கதையை இயக்கி அதில் நடித்து
மக்களிடையே பலத்த பிரபலத்தை அடைந்தவர் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு அவர்கள். இவர் முதன் முதலில் தில்லு முல்லு படத்தின் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் இந்த படத்தை தொடர்ந்து பல பல படங்களை இயக்கியும் அதில் நடித்தும் உள்ளார். அதிலும் மணல் கயிறு , ரகசியம், மின்சாரம் அது சம்சாரம் போன்ற படங்கள் இன்றைக்கும் மக்கள் மத்தியில் பெரிதளவில்
விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது எனலாம். இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருந்த விசு அவர்கள் வயதை எட்டிய நிலையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிறுநீரக பிரச்சனையால் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி காலமானர். இவர் மறைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகும் நிலையில் சமீபத்தில் இவரது
குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விசு கடந்த 1975-ம் ஆண்டு சுந்தரி எனும் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா, கல்பனா என மூன்று மகள்கள் உள்ளார்கள். தற்போது மூவருக்கும் திருமணமான நிலையில் மூவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டனர்.. இந்நிலையில் இவர்களது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது….