தென்னிந்திய திரையுலகம் தொடங்கி மக்கள் மத்தியில் வரை கடந்த ஒரு வாரமாக பெரிதளவில் பேசப்பட்டு வரும் ஒரு ஹாட் நியுஸ் என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் பற்றி தான். இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில் கடந்த ஜூன் 9-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து அவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல தனியார் சொகுசு விடுதியில் மிக பிரமாண்டமான முறையில் பல தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பாரம்பரிய இந்து முறைப்படி
நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணத்தில் ஆடம்பரமாக செட் அமைத்தது மட்டுமின்றி பல வித்தியாசமான நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் இடம்பெற்று இருந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தது மட்டுமின்றி அங்கு நயன்தாரா காலில் செருப்பு போட்டு கோவிலுக்குள் சென்றது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறு திருமணம் முடிந்ததில் இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இருவரும் தற்போதைக்கு ஹனிமூன் பிளான் எல்லாம் இல்லை இருவரும் பட வேலைகள் அதிகம் இருப்பதால்
அதனை பற்றிய யோசனை தற்போதைக்கு இல்லை என கூறியிருந்தார். ஆனால் இவர்கள் ஹனிமூன் வேண்டாம் என கூற காரணம் நயன்தாராவுக்கு கர்ப்பபையில் இருக்கும் பிரச்சனையே காரணம் அவர் அதற்காக ஆறுமாத காலம் கேரளா சென்று சிகிச்சை எடுக்க உள்ளார் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன் மற்றும் விக்கி இருவரும் இல்லை ஆனாலும் அதில்
ஹோட்டல் ஒன்று இருப்பதோடு அதில் தி சியம் ஹோட்டல் என உள்ளது இந்த ஹோட்டல் தாய்லாந்தில் இருப்பதாகவும் இருவரும் தற்போது தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்று இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர். இந்நிலையில் ஹனிமூன் பிளான் எல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு நைசாக வெளிநாடு பரந்த நயன் விக்கியை கலாயித்து தள்ளி வருகின்றனர் இணையவாசிகள்….