சின்னத்திரை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகையான பரமேஸ்வரி எனும் பைரவி போலீசில் கொடுத்திருக்கும் புகார். இவ்வாறு பல வருடங்களாக சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னை ஒருவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவரது பெயர் ராஜா தேசிங்கு
சுப்பிரமணி இவர் சினிமா இயக்குனர், தயாரிப்பளர் என பொய் சொல்லி தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை ஏமாற்றுவது தான் அவருடைய முழுநேர வேலை. இதுபோல் இவர் நிறைய நபர்களை ஏமாற்றி உள்ள நிலையில் முதலில் என்னையும் இதேமாதிரி படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார் மேலும் அந்த படத்தின் தயாரிப்பு வேலையில் கொஞ்சம் சிக்கல் உள்ளதாகவும் அதற்காக கொஞ்சம் பணம் தேவைபடுவதாகவும் கூறினார். நீங்கள் அதை ஏற்பாடு செய்து கொடுத்தால் படத்தின் இணை தயாரிப்பாளர் நீங்கள் தான் என சொன்னதை நானும் நம்பி என்னுடைய நகைகளை எல்லாம் விற்று அவரிடம் ஐந்து லட்சம் பணத்தை கொடுத்தேன். அதன் பின்னர் படத்துக்காக ஆபிஸ் போட்டிருப்பதாக கூறி ஜாகுவார் ஆபிசுக்கு எல்லாம் போனோம். இருப்பினும் எனக்கு அவர் மீது சந்தேகமாகவே
இருந்தது இருந்தும் அவர் என்னை பக்திமான் போல காட்டி என்னை நம்ப வைத்துவிட்டார். துவக்கத்தில் என்னுடன் நண்பராக பழகி வந்தவர் சிறிது நாட்களிலேயே அதிகளவில் உரிமை எடுத்துகொள்ள ஆரம்பித்து விட்டார் அதன்பின்னர் தான் எனக்கு தெரியவந்தது அவர் ஏற்கனவே குழந்தைகிட்ட அத்துமீறி நடந்துகொண்டு ஜெயிலுக்கு போனவராம். மேலும் சூட்டிங் போறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போய்டு வரலாம் என கூறி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்றோம் அப்போதே எனக்கு இவர் மீது சந்தேகம் அதிகரிக்க தொடங்கியது . அதனால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன் இருந்தும் நான் கண்மூடி சாமி கும்பிடும் போது எனக்கே தெரியாமல் தாலி கட்டிவிட்டார். அந்த சமயத்தில் எனக்கு என்ன
செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் அதன்பின்னர் என்னை மிகவும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார். மேலும் என்னை கட்டாயபடுத்தி என்னுடன் உறவு கொண்டார் இதுமட்டும் இன்றி தற்போது என்னையும் என் பெண் குழந்தைகளையும் அது மாதிரியான தொழில் செய்ய வறுபுறுத்தி வருகிறார் . இதனால் எனது புகாரை விசாரித்து அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ….