தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ஹாலிவுட் அளவில் பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தது மட்டுமின்றி பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். ஒரு கட்டத்தில் இவரெல்லாம் ஹீரோவா என கேட்டவர்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் வகையில் நடித்து வரும் இவருக்கு பக்கபலமாக இருந்தது என்னவோ ஆரம்பகட்ட திரைபடங்கள் தான் அதில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த புதுகோட்டையிலிருந்து சரவணன் படம்
இவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது எனலாம். இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து திரையுலகிற்கு தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அபர்ணா பிள்ளை . இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அதன் பின்னர் நடிப்பை விடுத்து கடந்த 2011-ம் ஆண்டு பரணி எனும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அபர்ணா தனது பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதில் நான் மிஸ் சென்னை ஆன போது தான் எனக்கு புதுகோட்டை சரவணன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இதனைதொடர்ந்து எனக்கு
அமெரிக்காவில் இந்தியாவுக்காக கலந்து கொள்ளும் போட்டியில் நான் கலந்து கொண்டேன் அந்த தகவல் செய்திதாள்களில் பதிவாக வந்த நிலையில் நான் மேலும் பிரபலமானேன். அந்த சமயத்தில் நான் காலேஜில் படித்து கொண்டிருந்தேன் அப்போது எனக்கு படத்தில் நடிப்பதற்கு எல்லாம் அவ்வளவாக விருப்பம் இல்லை இருப்பினும் என்னை சமாதானபடுத்தியே படத்தில் நடிக்க வைத்தார்கள். மேலும் அந்த படத்தில் நான் கிளமாரக நடித்து இருந்தேன் அது இல்லாமல் அதன் பின் நடித்த எல்லா படத்திலும் அப்படித்தான் நடித்து இருப்பேன். இதனால் எனக்கு அடுத்தடுத்து
வந்த வாய்ப்புகள் அனைத்தும் அவ்வாறாகவே வந்தது. இதை நான் குறை சொல்லவில்லை படத்திற்கு என்ன தேவையோ அதற்கு தகுந்த மாதிரி நடித்தாக வேண்டும். சொல்லப்போனால் புதுகோட்டையிலிருந்து சரவணன் படத்தில் ஒரு காட்சியில் கல்லறையில் அமர்ந்து இருப்பேன் ஆனால் அன்று எனக்கு பிறந்தநாள் என கூறியிருந்தார். இப்படி இருக்கையில் அபர்ணாவின் சமீபத்திய பேட்டி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…