வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பலத்த பிரபலத்தை அடைந்து இருப்பதோடு அதிகளவில் விரும்பி பார்க்கபடுகிறது. இதன் காரணமாக அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே
வைத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் பலத்த வெற்றியை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பான முன்னணி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரக்க்ஷிதா. இவர் பல முன்னணி சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தன்னுடன் சீரியலில் கதையின் நாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து
கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து இணைந்து தொடர்களில் நடித்து வந்தனர் இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தனித்து வாழ்ந்து வந்த ரக்க்ஷிதா சமீபகாலமாக இயக்குனர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாக
செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரை ரக்க்ஷிதா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையினரை உறைய வைத்துள்ளது. இருப்பினும் அந்த இயக்குனர் யார் மற்றும் அவரை பற்றிய எந்த தகவலும் இன்னும் தெரிய வராத நிலையில் இந்த தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…