தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா அதிலும் கடந்த சில மாதங்களாக அம்மிணியின் நடிப்பு மற்றும் கிளாமர் உச்சிக்கு சென்றுள்ள நிலையில் பல இளசுகளின் மற்றும் சினிமா வட்டாரத்தின் சமீபத்திய ஹாட் குயீன் அம்மிணி தான். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் தெலுங்கு உலகில் முன்னணி நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு
இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தது மட்டுமின்றி படங்களில் நடித்தும் வந்தனர். இவ்வாறு இருக்கையில் திருமணத்திற்கு பிறகு சற்றே கிளாமருக்கு பச்சை கொடி காட்டி வந்தார். இந்நிலையில் இது காரணமா இல்லை வேறு காரணமா என தெரியாத நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த பிரிவால் சில காலம் மனமுடைந்து இருந்த சமந்தா அதிலிருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி கிளாமரை
அள்ளி தெளித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது கடந்த சில தினங்களாக தெலுங்கு சினிமா உலகில் நாகசைதன்யா பிரபல நடிகையான சோபிதா வுடன் நெருங்கி பழகி வருவதோடு அவருடன் அடிக்கடி வெளியில் செல்வது என இருந்து வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த தகவலை பார்த்த நாகசைதன்யா ரசிகர்கள் பலரும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப காரணம் சமந்தா தான் என திட்டி தீர்த்து வருகின்றனர். இதனை கேட்டு உச்ச கட்ட
கோபத்துக்கு ஆளான சமந்தா தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ஒரு பெண்ணை பற்றி எதாவது வதந்தி வந்தால் அதை அப்படியே நம்புகிறோம் அதுவே அது ஒரு ஆணை பற்றிப் வந்தால் அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண்தான் என எப்படி உங்களால் பேச முடிகிறது என ஆவேசமாக பேசியுள்ளார். இதையடுத்து இந்த பதிவு மற்றும் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….