இருந்தாலும் இது எல்லாம் கொஞ்சம் ஓவர் …. ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைக்கும் நயன்-விக்கி ஜோடி !!!

517

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல முன்னணி தென்னிந்திய பிரபலங்கள் முன்னிலையில் பாரம்பரிய இந்து முறைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம். இவரும் பிரபலா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த எழு வருடங்களுக்கு மேலாக ஒன்றாக காதலித்து வந்தது மட்டுமின்றி இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இவர்களது

ரசிகர்கள் பலரும் எப்போது திருமணம் என தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இறுதியில் இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையில் முறைப்படி இணைந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்து பத்திரிக்கையாளர்கள் சந்திந்த புது தம்பதியினர் அவர்களுக்கு தங்களது நன்றிகளை கூறியதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது ஹனிமூன் குறித்து கேட்டதற்கு நயன்தாராவும் எதுவும் பேசாமல் வெட்கத்துடன் சிரித்தபடி இருக்க விக்னேஷ் சிவன் தற்போதைக்கு

அதைபற்றிய எந்த பிளானும் இல்லை என கூறியிருந்தார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இருவரும் தாய்லாந்திற்கு சத்தமில்லாமல் பறந்து சென்றது மட்டுமின்றி அங்கு தங்களது ஹனிமூனை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் புகைப்படங்கள் பலவற்றை

பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா கழுத்தில் மஞ்சள் தாலியுடன் நடந்து வருவது அதேபோல் விக்னேஷ் சிவன் நயனிடம் மண்டியிட்டு தனது காதலை வெளிபடுத்துவது மேலும் பல நெருக்கமான புகைபடங்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமின்றி பலரும் இதற்கு பலவிதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர் ….

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here