திரையுலகை பொறுத்தவரை அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற உடல்ரீதியான இன்னல்கள் இருந்துகொண்டுதான் வருகிறது. சொல்லப்போனால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்காத நடிகைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல நடிகைகளும் இதற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பல வருடங்களாக யாரும் வெளியில் கூற தயங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இதனை வெளிக்கொண்டு வரும் விதமாக மீடூ , சுசி லீக்ஸ் போன்ற அமைப்புகள் உருவாகி அதன் மூலம் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை வெளிப்படையாக ஆதாரத்துடன்
கொட்டிதீர்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் இந்த நிலை அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பிரபல சேனலான விஜய் டிவியில் முன்னணி நடிகர் ரஞ்சித் கதையின் நாயகனாக நடிக்க வெளிவந்த முன்னணி தொடர் செந்தூரபூவே. இந்த தொடரின் மூலம் நடிகையாக தமிழ் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் நடிகை ஸ்ரீநிதி. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அந்த தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது பல முன்னணி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தனக்கு நடந்த
இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவுகள் வர ஆரம்பித்துவிட்டன எனக்கு அந்த வயசுலேயே பெரிய படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது அப்போது பிரபலம் ஒருவர் நீ இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் என்னை கவனிக்க வேண்டும் என கூறினார் அப்போது எனக்கு அப்படி என்றால் என்ன என்றே தெரியாது. உடனே என் அம்மாவிடம் சொல்லவும் அவரும் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் டீக்கு பதிலாக காபி தங்குவதற்கு இடம் இதைதான் அப்படி சொல்கிறார்கள் என
நினைத்து அவரும் சரி என சொல்லிவிட்டார். ஆனால் அவர்கள் உடனே அட்ஜஸ் கிடையாது அட்ஜஸ்ட்மென்ட் என அழுத்தி சொன்னார்கள் இதனை தொடர்ந்து நீங்க இதுக்கு ஓகே சொல்னாலும் பரவாயில்லை உங்க அம்மாவை அட்ஜஸ்ட்மேன்ட் செய்ய சொல்லுங்க என என்னிடமே கூறினார்கள் என அதிரும் தகவலை கூறினார். இந்த தகவல் இணையத்தில் வெளியானதை அடுத்து படத்துல நடிக்க வர நடிகைக்கு தான் இந்த நிலமைன்னு பாத்த அவங்க குடும்பத்துல இருக்குறவங்கள விட மாட்டாங்க போல என கழுவி ஊற்றி வருகின்றனர் …