தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தையும் அவர்களது மனதில் நீங்காத இடத்தையும் பிடித்துள்ளது எனலாம். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சூர்யவம்சம். இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பர் மேலும் இதில் தேவயாணி, ஆனந்தராஜ், மணிவண்ணன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பார்கள். இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் வரும் சிறுவனை யாரலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது காரணம் அந்த அளவிற்கு தனது நடிப்பால் பலரையும் கவர்ந்து இருப்பார். இவ்வாறு இருக்கையில் அந்த சிறுவனாக நடித்தது விஜய் டிவி கனா காணும்
காலங்கள் தொடரில் நடித்த ராகவி தன பலரும் நினைத்து வந்த நிலையில் அது அவர் இல்லையாம் நான் தான் மற்றொரு சீரியல் நடிகை சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் சேனலில் வெளியான பிரபல தொடரான நீதானே என பொன்வசந்தம் தொடரில் நடித்த நிவாஷினி திவ்யா தான். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சண் டிவியில் வெளிவந்த செல்லக்கிளி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானர். இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது சீ தமிழ் சேனலில் சீரியல் தயாரிப்பாளர் பதிவியில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் சிறுவயதில் இருந்தே மீடியா எனக்கு பரிச்சியம் ஆன ஒன்று அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக இதுவரை
ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். என் சொல்லப்போனால் சூர்யவம்சம் படத்தில் சிறுவனாக நடித்தது கூட நான் தான் ஆனால் எல்லோரும் ராகவி என எண்ணி வருகிறார்கள். எனது படிப்பு முடித்ததும் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டேன் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு மேலாக கஷ்டபட்டே இந்த தயாரிப்பளர் பதவிக்கு வந்துள்ளேன். நான் இந்த நிலைக்கு வர முக்கிய காரணம் எனது அப்பா மற்றும் அம்மா தான் மேலும் எனக்கு ஒரு அக்கா மற்றும் அண்ணன் உள்ளார்கள். இதில் அண்ணன் என்னுடைய துறையில் அவர் தான் எனக்கு பெரும்
உதவியாக இருந்து வருகிறார் அக்கா திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். நான் தயாரிப்பளர் ஆன உடன் சீரியலில் நடிக்க மாட்டேன் என அவர்களே முடிவு செய்து யாரும் என்னை நடிக்க அணுக மறுக்கிறார்கள் ஆனால் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு நடிப்பது ரொம்ப பிடிக்கும் அதனால் எந்த சேனல் சீரியல் வாய்ப்பாக இருந்தாலும் நான் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது….