கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பல முன்னணி நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மென் மற்றும் தமிழில் வாத்தி, திருசிற்றலம்பலம் போன்ற பல படங்களில் நடித்து வரும் நிலையில் நேற்று தனது 39-
வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இதனையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் மற்றும் அவரது ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இந்த பிறந்தநாளை மிகுந்த சோகத்துடன் தனிமையில் கொண்டாடி உள்ளார் தனுஷ் காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பதினெட்டு வருடங்கள் ஒன்றாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றாக
வாழ்ந்து வந்த மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை இதுவரை இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை தனது பிறந்தநாளை தனது மனைவி மற்றும் மகன்களுடன் கொண்டாடி வந்த நிலையில் இந்த வருடம் தனிமையில் கொண்டாடி உள்ளார். மேலும் இது குறித்து இணையத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் அதில் தனுஷ் பியானோ
வாசிப்பது போல் உள்ளது மேலும் அதில் தனுஷ் அவர்கள் கமல் ஹாசன் ஹே ராம் படத்தில் நடித்த இளையராஜாவின் பாடலான நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி எனும் பாடலுக்கு தனது சொந்த இசையை இசைத்து உள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய நிலையில் இதைபார்த்த பலரும் இவருக்கு பாராட்டுகள் கூறி வருவதோடு பிரிந்த தனது மனைவியை எண்ணியே இவர் இதை செய்துள்ளார் எனவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday…🤩 bro don’t kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022