பொதுவாகவே திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது வதந்திகள் மற்றும் சர்ச்சையான பதிவுகள் வருவது என்பது இயல்பான ஒன்றே இந்நிலையில் இது போன்ற சர்ச்சைகளில் சிக்காத நடிகர் நடிகைகளே இல்லை எனலாம். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக இதுபோன்ற பல சர்ச்சையான கருத்துகளை தனது தனியார் யூடூப் சேனலில் வீடியோவாக பேசி வெளியிட்டு அதன் மூலம் தற்போது பிரபலமடைந்து இருப்பதை பல சிக்கலில் மாட்டி தவித்து வருபவர் பிரபல முன்னணி நடிகரும் சர்ச்சை பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன். இவர் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை காட்டிலும்
பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்க விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம் எனலாம். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக பல நடிகைகளை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் கூட பிரபல முன்னணி நடிகை ராதிகா பற்றி தவறாக பேசிய நிலையில் எதிர்பாராத விதமாக கடற்கரையில் பயில்வனை சந்திந்த ராதிகா அவரை சும்மா வெளுத்து வாங்கியிருந்தார் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இதையடுத்து பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் பற்றி பேசியிருந்த பயில்வான் அந்த படத்தில் முக்கிய காட்சி ஒன்றில்
நடித்திருந்த ரேகா நாயரை பற்றி தவறாக பேசி அவரை இழிவு படுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலையில் நடைபயிற்சியின் போது அவரை பார்த்த ரேகா சாலையில் வைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அந்த இடமே போர்களமாக மாறிய நிலையில் அங்கு இருந்தவர்கள் இருவரையும் ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்தும் தனது யூடுப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் ரேகா பற்றி பேசியிருந்தார் அதில் அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒற்று தனியார் யூடுப் சேனலுக்கு என சதி செய்துள்ளார் என அதில் கூறியிருந்தார். இதனை அறிந்த ரேகா நாயர் மிகுந்த
கோபத்துடன் பயில்வான் தன்னை தேவையில்லாமல் வதந்தி பரப்புவதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் . இதன் காரணமாக பயில்வான் மீது வழக்கு தொடுக்கப்பட உள்ள நிலையில் அவர் டிவி நிகழ்ச்சி மற்றும் யூடுப் சேனல் எதிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட உள்ளதாக கூறபடுகிறது. இந்த தகவல் வெளியான நிலையில் ரேகா நாயர் தான் பயில்வான் ரங்கநாதனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என அனைவரும் கூறி வருகின்றனர். இருப்பினும் பயில்வான் ரேகா மீது அவர் என்னை முடித்து கட்ட மிரட்டுவதாக போலீசில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்….