தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் இரு மகன்களும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக
கொடிகட்டி பரந்து வருகின்றனர். அதிலும் மூத்த மகனான சூர்யா அவர்கள் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதோடு தனக்கென மக்கள் மற்றும் திரையுலகில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் ரொலெக்ஸ் எனும் வில்லன் வேடத்தில் நடித்து பலத்த பாராட்டுகளை பெற்று இருந்தார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூர்யா தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்த பல தகவல்களை கூறியிருந்தார். அதில் நான் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதுதான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனது முதல் படம் நேருக்கு நேர் இந்த படத்தின் சூட்டிங் கொல்கத்தாவில் நடைபெற்றது இந்த படத்தின் துவக்கத்தில் எனக்கு சரியாக நடிப்பு வரவில்லை இதனால் அங்கு சுற்றியிருந்தவர்கள் அனைவரும் என்னை பார்த்து சிரித்தார்கள்.
இதனால் நான் என்ன செய்வது என தெரியாமல் இருந்த நிலையில் மதிய உணவு இடைவேளையில் பிரியாணி சாப்பிட்டு வந்தேன் அப்போது எதேச்சையாக இயக்குனரிடம் பிரியாணி சூப்பர் என சொன்னேன் அதற்கு அவர் அப்படியா நல்லா சாப்பிடு ராசா என நக்கலாக சோகமாக சொன்னார் . இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்ததை அடுத்து அங்கிருந்து உடனே தனியாக ரூமுக்கு வந்து தலையணை நனையும் வரை அழுது புலம்பினேன் நடிப்பே வேண்டாம் என்று என மிகுந்த வேதனையுடன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது….