அந்த காலம் முதல் இந்த தலைமுறை வரை சினிமாவில் நடிக்கும் பெண்களுக்கு பலவிதமான இன்னல்கள் இருந்து கொண்டுதான் வருகிறது என்னதான் சினிமா நவீனமயமனாலும் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்துதான் வருகிறது எனலாம் இப்படி இருக்கையில் பல வருடங்களாக இதை பற்றியும் யாரும் வெளியில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பல நடிகைகளும் தானாக முன்வந்து தங்களுக்கு திரையுலகில் உடல் மற்றும் மனரீதியாக நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேலும் இதற்கென பல
அமைப்புகளையும் உருவாக்கி அதன் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பல முன்னணி பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இது ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தான் இருந்து வந்தது என பார்த்தால் தற்போது சின்னத்திரையிலும் அது நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட அங்கு பல படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தற்போது தமிழில் பல முன்னணி படங்களில் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ஷர்மிளா. இவர் தனது நான்கு வயது முதலே படங்களில் நடித்து வரும் நிலையில் மனசே மௌனமா கிழக்கே வரும் பாட்டு போன்ற பல படங்களில் முக்கிய கேரக்டரில்
நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சில வருடங்கள் சினிமாத்துறையை விட்டு விலகி இருந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். இதையடுத்து தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஷர்மிளா மலையாள படத்தின் சூட்டிங் கோழிகோட்டில் நடந்து வந்தது அதில் நான் நடித்து வந்தேன் மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் இளம் வயது இளைஞர்கள் இந்நிலையில் அந்த படத்தின் தொடக்கத்தில் என்னை அவர்கள் அனைவரும் அக்கா எனவே அழைத்து வந்தார்கள். இப்படி இருக்கையில் படம் ஆரம்பித்து மூன்றே நாட்களில்
அவர்களது உதவியாளரை அனுப்பி என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ரெடியா என கேட்டார்கள் மேலும் எனக்கு ஐம்பது ஆயிரம் அவரை ரேட் பேசினார்கள் நான் என்ன செய்வதென தெரியாமல் நீங்கள் எல்லாம் என் மகன் வயது உடையவர்கள் நான் உங்களை அந்த ஸ்தானத்தில் வைத்துதான் பார்க்கிறேன் என சொல்லியும் என்னை விடாது வற்புறுத்திய நிலையில் அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து அங்கு இருந்து வந்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…..