கொஞ்சம் இடம் கொடுத்த ரொம்ப ஓவராத்தான் போறீங்க எங்கள பாத்தா எப்படி இருக்கு ….. நயன்தாராவை கழுவி ஊற்றும் ரசிகர்கள் …..

1571

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல வருடங்களாக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக இருக்க முடியும். இவ்வாறு இவ்வளவு பிரபலமாக திரையுலகில் கொடிகட்டி பரந்து வரும் நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது

திருமணம் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் சூழ வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பல பிரமாண்டங்கள் நிறைந்து இருந்து நிலையிலும் பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது அதன்படி திருமணத்தில் முக்கியமான நபர்களை மற்றும் அழைத்து இருந்தது மட்டுமின்றி வருபவர்கள் யாரும் மொபைல் பயன்படுத்த கூடாது மற்றும் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு காரணம் இவர்களது திருமணம் விழாவை பிரபல முன்னணி இணைய ஒடிடி தளமான

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 25 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை வாங்கி இருந்ததது இதன் காரணமாகவே இவர்களது திருமண நிகழ்வு புகைப்படம் மற்றும் வீடியோ எதுவும் அவ்வளவாக வெளியாகவில்லை இப்படி இருக்கையில் இவர்களது திருமணம் ,முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் இன்னமும் எந்த புகைப்படமும் வெளியாகத நிலையில் விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் இதனை அறிந்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒப்பந்த தொகையை திரும்ப கேட்டு

தகராறு செய்து இருந்தனர். இந்த விவகாரம் ஒரு வழியாக பேசி முடிக்கப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் தெரிய வந்த நிலையில் அவர்கள் கோபத்தின் எல்லைக்கு சென்றுள்ளனர் காரணம் இவர்களது படத்தை பார்த்து இவர்களுக்கு பணம் கொடுப்பதை தாண்டி இவர்களது திருமண விழாவையும் காசு கொடுத்து பாக்கணுமா அதுவும் கல்யாணத்தா கூட காசாக்க பாக்குரிங்களே என தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here