கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக பல முன்னணி சினிமா நடிகர் நடிகைகளும் தங்களது துணையுடனான உறவை முறித்து கொள்ளும் வகையில் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலக அளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது
மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வெளியான நாளில் இருந்தே பலரும் இதற்கு பல கருத்துகளை கூறி வருவதோடு இருவரையும் ஒன்று சேர்க்க பல வழிகளை முயற்சி செய்து வந்தனர். இருப்பினும் இதை எதை பற்றியும் துளியும் கவனம் கொள்ளாத இருவரும் தொடர்ந்து தங்களது பட வேளைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ஹாலிவுட் படமான தி கிரே
மேன் படத்தின் ப்ரோமோசன் வேலைக்காக அவர் மும்பையில் தங்கியுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரான ரிதேஷ் சித்வானி பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார் இந்நிலையில் அந்த பார்டியில் கலந்து கொள்ள தனுஷ் இளம் நடிகையான சாரா அலிகானுடன் கைகோர்த்தபடி வந்து இருந்தார். இந்த தகவல் மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தனுஷ் இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டி வருவதுதான்
இவர்களது பிரிவிற்கு காரணம் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சாரா அலிகான் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகரான சையிப் அலிகானின் மகள் ஆவார் இப்படி இருக்கையில் சாராவும் தனுஷை விடாமல் துரத்தி வருவதோடு எங்கு சென்றாலும் அவருடன் செல்வது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் கூட அவரது கையை இறுக்கமாக பிடித்தபடி தான் இருந்தார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையில் நெருக்கமான பழக்கம் எதாவது இருக்குமோ எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்….