Sunday, September 8, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கல்யாணமான ஒரே மாசத்துல எழுந்த சக்காளத்தி சண்டை .... நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்னேஷ்...

கல்யாணமான ஒரே மாசத்துல எழுந்த சக்காளத்தி சண்டை …. நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்னேஷ் சிவன் கொந்தளித்த நயன்தாரா !!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் இடையில்நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனது. இதையடுத்து இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதோடு ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்ததோடு எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வது அடிக்கடி நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படங்களை பதிவிடுவது என இருந்து வந்த நிலையில் இவர்களது திருமணம்

 

எப்போது என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இறுதியாக இவர்களது திருமணம் கடந்த மாதம் சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணத்தில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர் இவ்வாறு இருக்கையில் திருமணம் சுமூகமாக முடிந்த நிலையில் அடுத்த நாளில் இருந்தே இருவருக்கும் தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் திருப்பதி கோவிலுக்கு சென்றபோது நயன்தாரா காலணியுடன் கோவிலுக்கு வந்ததாக புகார் எழுந்தது அதையடுத்து இவர்களது

திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஏலம் எடுத்து இருந்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. இப்படி இருக்கையில் தற்போது இதையெல்லாம் தாண்டி கணவன் மனைவி இருவருக்குள்ளேயே பிரச்சனை கிளம்பியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து இருந்தனர். இதில் படபிடிப்பு தளத்திலேயே சமந்தாவிடம் விக்னேஷ் சிவன் நெருக்கமாக பழகி வந்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில் நயன்தாரா அவர் மீது செம கோபத்தில் இருந்தார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார் மேலும் இந்த படத்தில்

நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் சிபாரிசு செய்து வருகிறார். இதையடுத்து இந்த தகவலை அறிந்த நயன்தாரா உச்சகட்ட கோபத்துக்கு சென்ற நிலையில் ஏற்கனவே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல பண்ணது பத்தாம இந்த படத்துலயும் உங்க வேலைய காட்டுறீங்களா என சக்காளத்தி சண்டையை போட்டு வருகிறார். கல்யாணத்துக்கு பிறகு குடும்பத்தில் சண்டை வருவது எல்லாம் இயல்பு தான் ஆனால் முதல் சண்டையே இந்த மாதிரி என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான் மேலும் ஏகே 62 படத்தில் சமந்தா நடிக்கக்கூடாது என தீர்மானமாக சொல்லிவிட்டாராம் நயன்தாரா….

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments