தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய வெள்ளித்திரையிலே கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தா. தற்போது ஹிந்தியிலும் ஆயுஷமான் குரானா கூட ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி டாப் இல் இருக்கும் போது எதற்கு மலையாளத்தில் நடிக்க ஆசை படுகிறார் என்று தெரியவில்லை.
மலையாள சினிமா என்றால் அன்று போல் இன்றும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து சரியான யுகத்தில் படம் தயாரிப்பதில் டாப் தான். ஆனால் தமிழ் சினிமாவில் ஒப்பிடுகையில் சற்று குறைவு தான். அவர்களிடம் மார்கெட்டிங் தமிழ் சினிமா அளவில் ஒப்பிடுகையில் சரியாக இல்லாததால் டாப் இல் இருக்கும் நடிகர் நடிகைகள் அந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்கள்.
சீசன் இல்லாத டைம்லதா நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகள் கூட மலையாளத்தில் நடித்தனர். ஏனென்றால் அங்கு எடுக்க படும் படம் கம்மியான பட்ஜெட் மற்றும் கம்மியான சம்பளம் . இப்படி இருக்கையில் எதற்காக மலையாள படத்தில் துல் கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்தார் என்று தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் வட்டாரத்தில் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்று பேசிக்கொண்டு உள்ளனர். அந்த மலையாள படம் ஒரு காங்ஸ்டர் படம் என்றும் படத்தின் பெயர் “கிங் ஆப் கோதா” என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டதால் இந்த படத்தினை தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்து ஒளிபரப்ப செய்வதாக படக்குழு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது என்று மலையாள சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.