தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் பல வெற்றி படங்களை கொடுத்து இன்றைக்கு சினிமாவில் தனக்கென தனி சிம்மாசனத்தை பிடித்த சில நடிகர்களுள் அதிகமான ரசிகர்களை கொண்டு முன்னிலையில் இருக்கும் நடிகர் தான் இளைய தளபதி விஜய். இவரின் 66 வது படமான வாரிசு படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதெராபாத் இல் நடந்துகொண்டிருக்கிறது என்ற தகவல் படக்குழுவின் மூலம் வெளியானது. இந்த படத்தில் தளபதி விஜய் கு ஜோடியாக ராஷ்மிகா மந்த்தனாவும்
முக்கிய கதாபாத்திரங்களுக்கு சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, யோகி பாபு நடித்து வருகின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. இந்த படத்திற்கு தமன் இசையமக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிந்த உடனே தளபதி விஜய் வேறு ஒரு படத்தில் பிஸி யாக உள்ளதாக சினிமா வட்டரத்தில் தகவல் வெளியானது. தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் கைதி, மாஸ்டர் போன்ற முன்னணி வெற்றி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தளபதி –
67 படத்தின் இயக்குனரும் இவர் தன் என்ற தகவலும் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு அவரது ட்விட்டரில் கதையை எழுத துடங்கியதால் நான் சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதுமட்டுமின்றி அடுத்த படத்தின் அப்டேட் டுடன் உங்களை சந்திக்கிறேன் எனவும் கூறி இருந்தார். தளபதி-67 இன் வேளையில் பிஸி யாக இருப்பதாக சினிமா வட்டாரத்தின் மூலம் தகவல் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இப்படி கூறி இருந்த
நிலையில் தற்பொழுது ஒரு புதிய அப்டேட் வெளிவந்தது. படத்தில் ஆறு வில்லங்கள் நடிக்க உள்ளனராம். ஹிந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்த பட்டதாம் மேலும் புதிய வில்லங்களாக கிடைமட்டத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளதாம். மேலும் தளபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது..